சுடச்சுட

  

  திமுக கூட்டணி வெற்றிக்காக தமுமுக, மமக பாடுபடும்: பொறுப்புக்குழு அறிவிப்பு

  By dn  |   Published on : 06th March 2014 02:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திமுக கூட்டணியின் வெற்றிக்காக தமுமுக, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் பாடுபடுவார்கள் என அக் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டப் பொறுப்புக் குழுத் தலைவர் எஸ். மில்லத் இஸ்மாயில் தெரிவித்தார்.

  திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தமுமுக, மனிதநேய மக்கள் கட்சியின் பொறுப்புக்குழுத் தலைவர் எஸ். மில்லத்இஸ்மாயில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமுமுக, மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை கூட்டுத் தலைமை ஆகும். கட்சியின் மாநிலத் தலைவரை குற்றம் சுமத்துவதற்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு தகுதி கிடையாது. தமுமுக, மமக கட்சியின் பெயர், கொடியைப் பயன்படுத்தினாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

  மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிப்பது என்பது மாநில செயற்குழு, பொதுக்குழுவில் எடுத்த முடிவாகும். தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு தமுமுக, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் பாடுபடுவார்கள். அமைப்பில் உண்மையாக பணி செய்யும் தொண்டர்கள் யாரும் அமைப்பை விட்டு வெளியேறவில்லை என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai