சுடச்சுட

  

  திமுக - விடுதலைச் சிறுத்தைகள் பேச்சுவார்த்தையில் இழுபறி: அறிவாலயத்திலிருந்து வெளியேறி நடந்தே சென்றார் திருமாவளவன்

  By dn  |   Published on : 06th March 2014 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுகவுக்கும் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கும் இடையே இழுபறி ஏற்பட்டுள்ளது.

  திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவினருடன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் புதன்கிழமை மாலை பேச்சுவார்த்தை நடத்தினர்.

  சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றும், அதில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

  விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சிதம்பரம், விழுப்புரம், தருமபுரி, திருவள்ளூர், பெரம்பலூர், தேனி உள்ளிட்ட தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்து, இதில் 5 தொகுதிகளை ஒதுக்குமாறு வலியுறுத்தி பேசினர். இதை திமுக ஏற்றுக்கொள்ளவில்லை.

  சிதம்பரம் தொகுதி மட்டுமே ஒதுக்கப்படும், அதில் நீங்கள் (திருமாவளவன்) போட்டியிடுங்கள் என்று மட்டும் திமுக குழுவினர் கூறியுள்ளனர்.

  5 கேட்கும் இடத்தில், 3 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் திமுக தன் முடிவில் இருந்து இறங்கி வரவில்லை. அதனால் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, கருணாநிதி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று இரு தரப்பினரும் முடிவு செய்தனர்.

  கருணாநிதியைச் சந்தித்தபோது, அவர் தொண்டை சரியில்லை என்று கூறி, வியாழக்கிழமை பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து, திருமாவளவனும் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு வெளியில் வந்துள்ளார். அப்போது திருமாவளவன், அறிவாலயத்தையும் கடந்து எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் உள்ள பெட்ரோல் பங்க் வரை நடந்தே சென்றார். பிறகு அங்கு அவருடைய வாகனம் வந்ததும், அதில் ஏறிச் சென்றார். திருமாவளவன் நடந்தே சென்றதால், அவர் கோபித்துக்கொண்டு சென்றதாக அறிவாலயத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

  விடுதலைச் சிறுத்தைகள் விலகலா?: கடந்த முறை திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்தத் தொகுதிகளைக்கூட ஒதுக்க திமுக முன் வராததால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.

  கருணாநிதியின் கருத்து: திருமாவளவன் வெளியேறியது தொடர்பாக கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர், "நோ கமெண்ட்' என்று மட்டும் கூறினார்.

   

  பேச்சுவார்த்தை சுமுகம்: தொல்.திருமாவளவன்

   

  திமுகவுடனான பேச்சுவார்த்தை தொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை:

  திமுகவுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்குமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. நாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்துள்ளோம். அதைத் தொடர்ந்து திமுக குழுவிடம் புதன்கிழமையும் பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தை சுமுகமாகவே இருந்தது. எங்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக மீண்டும் வியாழக்கிழமை (மார்ச் 6) காலை சந்தித்துப் பேச உள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai