சுடச்சுட

    

    தொண்டி, ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 24 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு

    By dn  |   Published on : 06th March 2014 11:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    fishermen

    திருவாடானை தாலுகா தொண்டி அருகே நம்புதாளை, ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 24 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

    தொண்டி அருகே நம்புதாளை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் புதன்கிழமை நாட்டுப் படகில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

    கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் நம்புதாளையைச் சேரந்த கார்மேகம், கரியமாணிக்கம் உள்பட 12 பேரையும், புதுகோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரையும் பிடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

    ராமேசுவரம் மீனவர்கள் 9 பேர்: இந் நிலையில் எல்லை தாண்டியதாக ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

    ராமேசுவரம் பகுதியிலிருந்து புதன்கிழமை காலையில் 90 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.இவர்கள் தனுஷ்கோடி, கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த நிலன், கிறிஸ்டோபர், கெட்சோன், கிளிண்டன்,ரிகால்டன், நாகு, மோகன், நம்புராஜன், முருகன் ஆகிய 9 மீனவர்களையும் கைது செய்தனர்.

    பின்னர், வியாழக்கிழமை அதிகாலையில் மன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவர்கள் மீது வழக்குப் பதிந்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை 48 மணி நேரம் ஆகியும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால் அவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai