சுடச்சுட

  
  murasulogo

  பாஜக - தேமுதிக கூட்டணி ஏற்படுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

  வரும் மக்களவைத் தேர்தல் தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியை கடந்த 4 மாதங்களுக்கு முன்பே பாஜக தலைவர்கள் தொடங்கினர்.

  காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் பாஜக கூட்டணிக்காக விஜயகாந்த், ராமதாஸ், வைகோ ஆகியோரை பலமுறை சந்தித்துப் பேசினார். இது குறித்து அவர் வெளிப்படையாகவும் அறிவித்தார்.

  அதனைத் தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாஜக தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன், எஸ். மோகன்ராஜூலு ஆகியோர் சந்தித்துப் பேசினர். அதன் பிறகு கூட்டணி தொடர்பாகவும், தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் கடந்த ஒன்றரை மாதங்களாக பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர்.

  தில்லி சென்று பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் பேசிய தமிழகத் தலைவர்கள் சென்னை திரும்பியபின்னர் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷுடன் பேச்சு நடத்தினர். தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டதாகவும் புதன்கிழமை (மார்ச் 5) இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் பாஜக தரப்பில் கூறப்பட்டது.

  ஆனால், தேமுதிகவுடன் உடன்பாடு ஏற்படாததால் இது குறித்து கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் விவாதிப்பதற்காக தமிழக பாஜக தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன், மோகன்ராஜூலு ஆகியோர் புதன்கிழமை பிற்பகல் அவசரப் பயணமாக தில்லி புறப்பட்டுச் சென்றனர்.

  தொடர்ந்து இழுபறி: பாமக, மதிமுக மற்றும் பல சிறிய கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டியிருப்பதால் 12 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என பாஜக தெரிவித்துள்ளது. ஆனால், தேமுதிக தரப்பில் குறைந்தது 14 தொகுதிகள் வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அதுபோல பாமகவும் 10 தொகுதிகளுக்கு குறையக் கூடாது என பிடிவாதம் பிடிப்பதாகவும் கூறப்படுகிறது. பாமகவுக்கு இணையாக தங்களுக்கும் தொகுதிகள் வேண்டும் என மதிமுக கூறுகிறது.

  இதனால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தேமுதிக, பாமக, மதிமுகவின் நிபந்தனைகளை கட்சி மேலிடத்திடம் கூறி ஆலோசனை பெறுவதற்காக தமிழகத் தலைவர்கள் தில்லியில் முகாமிட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாஜக கூட்டணியை இறுதி செய்வதில் மேலும் கால தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai