சுடச்சுட

    

    புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 24-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் அலுவலர் டி.ஸ்ரீகாந்த் கூறினார்.

    புதுவை கல்வித் துறை வளாகத்தில் அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

    கடந்த ஜனவரி 1-ம் தேதியை வாக்காளர் தகுதி பெறும் நாளாக கொண்டு தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 6-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 8,85,925 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 4,24,958, பெண் வாக்காளர்கள் 4,60,488. மற்றவர்கள் 12 பேர். சர்வீஸ் வாக்காளர்கள் 467.

    அடையாள அட்டை, வாக்காளர் சீட்டு வைத்திருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும்.

    சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம்: வாக்காளர் பட்டியலை சரிப்பார்க்க நாடு முழுவதும் வரும் 9-ம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

    905 வாக்குச்சாவடிகள்: புதுச்சேரி பிராந்தியத்தில் மொத்தம் 905 வாக்குச் சாவடிகளில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடத்தப்படவுள்ளது.

    உடனடியாக மாதிரி நன்னடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. இது தேர்தல் முடியும் வரை அமலில் இருக்கும். இது அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அரசுக்கும் பொருந்தும்.

    புகார் செய்ய தொலைபேசி எண்.1950: தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் 1950 என்ற இலவச தொலைபேசி எண் 24 மணிநேரமும் இயங்கும். மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்திலும் தொலைபேசி எண்கள் இயங்கும்.

    ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வாக்காளர் சீட்டு அந்தந்த வாக்குச்ச்சாவடி அலுவலர்களால் வழங்கப்படும். இதில் வாக்காளர்களின் பெயர், வரிசை எண், வண்ணப் புகைப்படம் ஆகியவை இடம்பெற்றிருக்கும். மேலும் வாக்களிக்க வரும்படி அழைப்பும் இருக்கும். அதன் பின்புறத்தில் வாக்குச்சாவடிக்கு செல்லும் வரைபடமும் இருக்கும். புகைப்பட அடையாள அட்டையை தவிர்த்து இந்த சீட்டு வைத்திருப்பவர்களும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

    தேர்தல் தேதி விவரம்: வேட்பு மனுக்கள் தாக்கல்: 29.3.2014, வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இறுதி நாள்: 5.4.2014, வேட்பு மனுக்கள் பரிசீலனை: 7.4.2014, வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்: 9.4.2014, வாக்குப்பதிவு நாள்: 24.4.2014, வாக்கு எண்ணிக்கை: 16.5.2014 என்றார் ஸ்ரீ காந்த்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai