சுடச்சுட

  
  tha_pandiyan

  எக்காரணம் கொண்டும் மரியாதையை இழக்க மாட்டோம் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன்.

  திருச்சி காட்டூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில அளவிலான பிரசாரப் பயணத்தின் நிறைவு விழாவில் அவர் மேலும் பேசியது:

  கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் ஏ.பி. பரதன் ஆகியோரை அழைத்துப் பேசினார். பத்திரிகையாளர்களையும் அழைத்து அந்த அம்மையாரே சொன்னார், "கூட்டணி ஏற்பட்டிருக்கிறது' என்று.

  அதன்பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர்களையும் அழைத்தார். பத்திரிகையாளர்களையும் அழைத்தார். அவரே சொன்னார் கூட்டணி அமைந்திருக்கிறதென்று. நாங்கள் சொல்லவில்லை.

  இப்போது முறிந்ததாக, அவரே சொல்லும் வரை நாங்கள் அந்த அணியில் இருக்கிறோம் என்றுதான் அர்த்தம். அணி இருக்கிறது, ஆனால் தொகுதி? ஜவ்வுமிட்டாய் போல இழுத்துக் கொண்டே இருக்கிறார்கள். நாளை (வியாழக்கிழமை) மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் நடக்கிறது. வெறுமனே உணர்ச்சியோடு மட்டுமே இருந்து விடமுடியாது. சில சமயங்களில் கோபமும் வரும்.

  இறுதி முடிவு எங்கிருந்து வர வேண்டுமோ, அதுவரை அமைதியாக இருப்போம். எடுத்துச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லுவோம். தீர்க்கமான முடிவை எடுப்போம். அதன்பிறகு, அந்த முடிவின்படி முன்னேறிச் செல்வோம். அப்போது திரும்பிப் பார்க்க மாட்டோம்.

  ஒடிஸா முதல்வர், பிகார் முதல்வர் ஆகியோர் இந்த அணியில் இருக்கிறார்கள். இப்போது மாயாவதியும் வருவதாகச் சொல்லியிருக்கிறார்.

  அதிமுக என்ற கழகம் பிறந்தபோது உடனிருந்தவர்களில் எஞ்சியிருப்பவன் நான். அது எழுப்பிய முழக்கங்களுக்காக, பட்டுக்கோட்டை பாடிய பாடலுக்காக இதுவரை உடனிருக்கிறோம். அதிமுக தாக்கப்பட்டபோதெல்லாம் காக்கும் பணியைச் செய்திருக்கிறோம்.

  இலங்கைத் தமிழர்களுக்காக அதிமுக எடுத்த அரசியல் நிலைப்பாடுகளில் உடன்பட்டு நிற்கிறோம். அதில் திருப்பம் ஏற்பட்டால், வழுக்கல் ஏற்பட்டால் பிறகு எது அரசியலோ அதன்படி எங்கள் பயணம் புறப்படும். எக்காரணம் கொண்டும் கெளரவம், மரியாதை, உரிமையை இழக்க மாட்டோம் என்றார் தா. பாண்டியன்.

  பிறகு செய்தியாளர்களிடம் தா. பாண்டியன் பேசியது:

  "என்னிடமோ, எங்கள் கட்சியினரிடமோ அதிமுக தலைமையிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஏதோ சொல்லியிருக்கிறார்கள். நாளை (வியாழக்கிழமை) சென்னையில் பேசுவோம்.அதன்பிறகு பேச வேண்டிய இடத்தில் பேசுவோம். கூட்டணியில் இல்லை என்பதை அவர் (ஜெயலலிதா) வாயால் சொல்ல வேண்டும். இத்தனைக் காலம் பொறுமையாக இருக்கிறோம் என்றால், பாரதக் கதையைப் படித்துப் பாருங்கள்' என்றார் தா. பாண்டியன்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai