சுடச்சுட

    

    முதல்வர் ராமநாதபுரம் வருகை: ஹெலிகாப்டர் இறங்குதளத்தை ஆய்வு செய்தார் அமைச்சர்

    By dn  |   Published on : 06th March 2014 02:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் பிரசாரத்துக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா வருவதை முன்னிட்டு, ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை கைத்தறித் துறை அமைச்சர் எஸ். சுந்தரராஜ், அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

    முதல்வர் ஜெயலலிதா இம் மாதம் 18 ஆம் தேதி அதிமுக வேட்பாளர் அ. அன்வர்ராஜாவை ஆதரித்து ராமநாதபுரத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறார். இதற்காக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தினை செப்பனிடும் பணிகளை செய்வது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக கைத்தறித் துறை அமைச்சர் எஸ். சுந்தரராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai