Enable Javscript for better performance
வாக்காளர் பெயர் சேர்க்கும் பணி: 9-இல் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    வாக்காளர் பெயர் சேர்க்கும் பணி: 9-இல் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்

    By dn  |   Published on : 06th March 2014 11:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக தமிழகத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    தமிழகத்தில் 60 ஆயிரத்து 418 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம் காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கத் தவறியவர்கள் அல்லது பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களது பெயர்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

    மையங்களில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அளித்திடலாம்.

    புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால்தான் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai