சுடச்சுட

    

    அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

    By dn  |   Published on : 07th March 2014 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.

    பண பலம் அதிகம் நிறைந்ததாகக் கருதப்படும் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் அதைக் கட்டுப்படுவதற்கு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தலைமையிலான தேர்தல் துறை மேற்கொண்டு வருகிறது.

    அதன் ஒருகட்டமாக, ஒவ்வொரு கிராமத்திலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும், அதைக் கண்காணிக்கவும் இளைஞர் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை: தேர்தல் தொடர்பாக தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. அரசியல் கட்சிகளுடன் வெள்ளிக்கிழமை மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் கூட்டம் தொடங்குகிறது.

    சிறப்பு முகாம்கள்: வரும் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும் வாக்காளர் சேர்ப்புக்கான சிறப்பு முகாம்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

    கட்சிகள் எவை? தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 9 கட்சிகள் உள்ளன. அதிமுக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய 9 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai