சுடச்சுட

    

    அம்மா தண்ணீர் பாட்டில் மற்றும் "ஸ்மால்' பஸ்களில் இரட்டை இலை: மறைக்க உத்தரவிடக் கோரி ஸ்டாலின் வழக்கு

    By dn  |   Published on : 07th March 2014 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் அம்மா தண்ணீர் பாட்டில் மற்றும் அரசு "ஸ்மால்' பஸ்களில் வரையப்பட்டுள்ள அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை மறைப்பதற்கு உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் மனு விவரம்: தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள "ஸ்மால்' பஸ்களில் வரையப்பட்டுள்ள அதிமுக-வின் கட்சி சின்னமான இரட்டை இலை முத்திரைகளை அகற்றக் கோரிய வழக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    மக்களவைத் தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அரசு சொத்துக்களில் அதிமுகவின் சின்னம் மற்றும் முதல்வரின் உருவப்படங்கள் இருப்பதால் அது மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

    இதனால், அரசு "ஸ்மால்' பஸ், குடிநீர் பாட்டில்களில் உள்ள இரட்டை இலை மற்றும் முதல்வர் புகைப்படத்தை அகற்ற உத்தரவிடுமாறு தேர்தல் ஆணையத்திடம் இரண்டு முறை புகார் அளித்துள்ளேன்.

    எனவே, அரசு தண்ணீர் பாட்டில் மற்றும் அரசு "ஸ்மால்' பஸ்களில் வரையப்பட்டுள்ள அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை மறைப்பதற்கு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு திங்கள்கிழமை (மார்ச் 10) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai