சுடச்சுட

    

    ஆலந்தூர் அதிமுக வேட்பாளர் வி.என்.பி.வெங்கட்ராமன்: ஜெயலலிதா அறிவிப்பு

    By dn  |   Published on : 07th March 2014 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    venk

    ஆலந்தூர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வி.என்.பி.வெங்கட்ராமன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வியாழக்கிழமை அறிவித்தார்.

    கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் அதிமுக அணியில் அங்கம் வகித்த தேமுதிக போட்டியிட்டது. அந்தக் கட்சி சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவர் வெற்றி பெற்று சட்டப் பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக செயல்பட்டு வந்தார்.

    இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதியன்று தனது எம்.எல்.ஏ. பதவி உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ராமச்சந்திரன் ராஜிநாமா செய்தார். இதையடுத்து, ஆலந்தூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. காலியான தொகுதியில் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 24 ஆம் தேதியன்று ஆலந்தூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேட்பாளர் அறிவிப்பு: இந்நிலையில் ஆலந்தூர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை ஜெயலலிதா வியாழக்கிழமை அறிவித்தார். சென்னை மாநகராட்சியின் 12-வது மண்டலக் குழுத் தலைவர் மற்றும் ஆலந்தூர் நகர அதிமுக செயலாளராகவும் வி.என்.பி.வெங்கட்ராமன் உள்ளார். கட்சியின் ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி அவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதாக தனது அறிவிப்பில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

    வாழ்க்கைக் குறிப்பு: வி.என்.பி.வெங்கட்ராமன், முன்னாள் அமைச்சர் நடேசன் பால்ராஜின் மகன் ஆவார். 48 வயதான அவர், பொறியியல் பட்டதாரி. கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை ஆலந்தூர் நகர் மன்ற எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றினார். அவருக்கு மகாராணி என்ற மனைவியும், ரவினா, ஷோபியா ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai