சுடச்சுட

  
  girls_college

  காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் வியாழக்கிழமை தாவணி திருவிழா நடைபெற்றது.

  மகளிரை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இந்த மகளிர் தினத்தில் பாரம்பரிய உடைவகையான தாவணியை பிரபலப்படுத்தும் வகையில் தாவணி திருவிழா கொண்டாடப்படும் என்று கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் சகாயம் அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் உள்ள அந்தந்த பகுதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையமும், அந்த பகுதியில் உள்ள மகளிர் கல்லூரியும் இணைந்து இத்திருவிழாவை நடத்தும்படிக் கேட்டுக் கொண்டார்.

  அதன்படி காஞ்சிபுரம் காமாட்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையமும், காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியும் இணைந்து மகளிர் தினம் மற்றும் தாவணி திருவிழாவை வியாழக்கிழமை கொண்டாடியது. கல்லூரி மாணவிகள் பாவாடை, தாவணி அணிந்து வந்து அணிவகுத்து நின்றனர். மேலும் கல்லூரி முதல்வர் சுபலட்சுமி கேக் வெட்டி மகளிர் தின மற்றும் தாவணி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். தாவணி அணிந்த மாணவிகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

  இந்த நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் வடிவமைப்பு உற்பத்தில முதுநிலை மேலாளர் வைரவேல், காஞ்சிபுரம் விற்பனை மேலாளர் நம்பிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai