சுடச்சுட

  

  கிருஷ்ணகிரியில் ரூ.25 லட்சம் வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்

  By dn  |   Published on : 07th March 2014 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  cash

  தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, கிருஷ்ணகிரி சுங்கச் சாவடி கட்டண மையம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற வாகன சோதனையின் போது, ரூ.25 லட்சம் மதிப்புள்ள 48 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.3 லட்சம் ஆகியவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

  மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கான தேதி அறிவிக்கப்பட்டவுடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் புதன்கிழமை அறிவித்தார்.

  இதையடுத்து, கிருஷ்ணகிரி அருகே சுங்கச் சாவடி கட்டண வசூல் மையத்தில் தேர்தல் பறக்கும் படை துணை வட்டாட்சியர் செந்தில்குமரன் தலைமையில் வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

  அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி பெங்களூருவைச் சேர்ந்த ரமேஷ் காரில் ரூ.25 லட்சம் மதிப்பிலான 48 கிலோ வெள்ளிப் பொருள்களை கொண்டு சென்றது தெரிய வந்தது. அதேபோல, பெங்களூருவைச் சேர்ந்த இருதயராஜ், காஞ்சிபுரத்தில் நிலம் வாங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.3 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

  தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி இந்தப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டதால், அவற்றைக் கைப்பற்றிய அலுவலர்கள் உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டவுடன், சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைப்பார்கள்.

  மேலும், 50-ஆயிரத்துக்கு மேல் பணத்தை கொண்டு செல்லும் போது உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai