சுடச்சுட

  

  செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத்தலைவராக அவ்வை நடராஜன்: மத்திய அரசுக்கு ஞானதேசிகன் நன்றி

  By dn  |   Published on : 07th March 2014 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  gnadesikan

  மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக தமிழறிஞர் அவ்வை நடராஜனை நியமனம் செய்துள்ள மத்திய அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் நன்றி தெரிவித்துள்ளார்.

  இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

  தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜனை, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராக மத்திய அரசு நியமித்துள்ளது. இது காங்கிரஸ் அரசு தமிழன்னைக்கு செய்துள்ள மரியாதையாகும்.

  அனைவராலும் மதிக்கப்படும் சிறந்த தமிழறிஞரான அவ்வை நடராஜன் நியமனம் மூலம் செம்மொழிவு தமிழாய்வு நிறுவனத்தின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

  இந்தப் பணியில் அவர் மேலும் பல சாதனைகளைப் படைக்க எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இந்த நியமனத்துக்கு பரிந்துரை செய்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பல்லம் ராஜூ ஆகியோருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஞானதேசிகன்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai