சுடச்சுட

    

    ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரம்: உள்ளூர் விஷயங்களும் இடம்பெறுகின்றன

    Published on : 07th March 2014 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jayalalitha

    முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரத்தில் உள்ளூர் பிரச்னைகளுக்கும் முக்கியத்துவம் தரப்படவுள்ளது. மேலும், ஒவ்வொரு தொகுதியின் நிலைமைக்கு ஏற்பவும் பேச்சில் மாற்றங்களைக் கொண்டு வர அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.

    முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தை காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் 4 நாள்களுக்கு முன்னர் தொடங்கினார்.

    ஸ்ரீபெரும்புதூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேசினார்.

    இந்தக் கூட்டங்களில் முதல்வரின் பேச்சில் தேசிய அளவிலான பிரச்னைகளும், மத்தியில் காங்கிரஸ்-திமுக அரசின் மோசமான செயல்பாடுகள் பற்றியே இருந்தன.

    இதைத் தொடர்ந்து, மார்ச் 9-இல் கன்னியாகுமரி, மார்ச் 11-இல் சிதம்பரம் என பல்வேறு தொகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்றுப் பேசவுள்ளார்.

    இனிவரும் கூட்டங்களில் உரையில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் எனவும், உள்ளூர் பிரச்னைகளுக்கு அதிமுக அரசு தீர்வு கண்டவிதம் உள்பட அனைத்து வகையான விஷயங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    முதல் கட்ட பிரசாரத்தை தென்காசி (தனி) தொகுதியுடன் ஏப்ரல் 5 ஆம் தேதி நிறைவு செய்யும் முதல்வர் ஜெயலலிதா, இரண்டாம் கட்டமாகவும் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

    குறிப்பாக, சென்னை உள்பட வட மாவட்டங்களில் அவர் தீவிர பிரசாரத்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai