சுடச்சுட

    

    தமிழகத்தில் கூட்டணி: காங்கிரஸின் நிலை என்ன? ஞானதேசிகன் தில்லியில் முகாம்

    By dn  |   Published on : 07th March 2014 03:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    gnadesikan

    மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து கட்சி மேலிடத் தலைவர்களுடன் ஆலோசிப்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தில்லியில் முகாமிட்டுள்ளார்.

    வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைப்பது, வேட்பாளர் தேர்வு என பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன. அதிமுக 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தைத் தொடங்கிவிட்டது. திமுக அணியில் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    பாஜக அணியில் தேமுதிக, பாமக, மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகியவை இணைந்துள்ளன.

    ஆனால், காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை. 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்களைப் பெற்றுள்ள காங்கிரஸ் அதனை கட்சி மேலிடத்துக்கு அனுப்பியுள்ளது. கடந்த மாதம் சென்னைக்கு வந்த மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். அப்போது கூட்டணி குறித்து இருவரும் பேசியதாகக் கூறப்பட்டது.

    பல்வேறு கட்சிகளுடன் காங்கிரஸ் மேலிடம் கூட்டணி பேச்சு நடத்தி வருவதாகவும், உரிய நேரத்தில் முடிவு அறிவிக்கப்படும் எனவும் காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்தனர்.

    இந்நிலையில் ஞானதேசிகன், வியாழக்கிழமை இரவு தில்லி புறப்பட்டுச் சென்றார். அடுத்த இரு நாள்கள் தில்லியில் தங்கும் அவர், மேலிடத் தலைவர்களுடன் கூட்டணி குறித்து ஆலோசிப்பார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai