சுடச்சுட

    
    krishnamurthy

    மக்களவைத் தேர்தலில் தென்காசி (தனி) தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.

    இதற்கான அறிவிப்பை வெளியிட்டு டாக்டர் கிருஷ்ணசாமி கூறியது:-

    தென்காசியில் நடைபெற்ற கட்சியின் மாநில அரசியல் உயர்நிலைக் குழு கூட்டத்தில், தென்காசி தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று ஒருமனதாக

    தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதன்படி அங்கு போட்டியிடுகிறேன். விரைவில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவேன். திமுக கூட்டணிக்கு ஆதரவாகவும் பிரசாரத்திலும் ஈடுபட உள்ளேன்.

    மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதால் எனது சட்டப்பேரவை பதவியை ராஜிநாமா செய்ய கால அவகாசம் உள்ளது. அதனால் உடனடியாக ராஜிநாமா செய்யமாட்டேன். திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் வரவேற்போம் என்றார் அவர்.

    தென்காசி மக்களவைத் தொகுதியில் கிருஷ்ணசாமி ஏற்கெனவே 4 முறை போட்டியிட்டுள்ளார். தற்போது 5 முறையாகப் போட்டியிட உள்ளார்.

    சட்டப்பேரவை உறுப்பினராக 1996-2006 காலத்தில் இருந்துள்ளார். தற்போது ஒட்டப்பிடாரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.

    தேர்தல் விதி மீறலா?

    அரசாங்கம் மூலம் ஊதியமோ, இதரப் படிகளோ பெறுபவர்களாக இருந்தால், அவர்கள் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு அந்தப் பதவியை ராஜிநாமா செய்திருக்க வேண்டும் என்பது தேர்தல் விதியாகும்.

    மக்களவைத் தேர்தலுக்கான மனுவை பரிசீலினை செய்யும்போது, தென்காசி தொகுதியில் போட்டியிடும் கிருஷ்ணசாமி அரசாங்கத்தின் எந்தப் பதவியிலும் இல்லை என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

    அதனால் கிருஷ்ணசாமி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்த பிறகே தேர்தலில் போட்டியிட தகுதி பெறுவார்.

    வாழ்க்கைக் குறிப்பு

    புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி

    பிறந்த நாள் : 03.04.1952

    பெற்றோர்: கருப்புசாமி - தாமரை அம்மாள்.

    சொந்த ஊர்: மசக்கவுண்டர் புதூர், குடிமங்கலம், உடுமலைப்பேட்டை,

     

    (பழைய கோவை மாவட்டம்) திருப்பூர் மாவட்டம்.

    கல்வி: எம்.பி.பி.எஸ்., எம்.டி., படித்தவர்.

    மனைவி: டாக்டர் வி.வி. சந்திரிகா, மகள்: சங்கீதா ஓம்நாத், மகன்: ஷ்யாம்

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai