Enable Javscript for better performance
தேர்தல் கூட்டணி: முடிவெடுக்க ராமதாஸூக்கு அதிகாரம்- Dinamani

சுடச்சுட

    
    gkmani

    வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது குறித்து முடிவு செய்ய ராமதாஸூக்கு அதிகாரம் அளித்து பாமக தலைமை நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.

    திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் பாமக தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார்.

    பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு, பாமக அறிவித்துள்ள வேட்பாளர்கள் விழுப்புரம் வடிவேல்ராவணன், ஆரணி ஏ.கே.மூர்த்தி, மயிலாடுதுறை அகோரம், கடலூர் கோவிந்தசாமி, சிதம்பரம் கோபி, திருவண்ணாமலை எதிரொலி மணியன், சேலம் அருள், புதுச்சேரி அனந்தராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாமக எடுக்க வேண்டிய நிலை, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தொகுதியில் நடைபெற்றுள்ளப் பணிகள், கூட்டணி அமைப்பதா அல்லது தனித்து போட்டியிடுவதா, கூட்டணி அமைப்பதாக இருந்தால் ஏற்கெனவே அறிவித்துள்ள சில தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்கலாமா என்பது குறித்து பல்வேறு விதமான கருத்துகள் இந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

    இதையடுத்து, கூட்டணி குறித்து முடிவெடுக்க பாமக நிறுவனர் ராமதாஸூக்கு முழு அதிகாரம் அளித்து இக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் வந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் வெளியேற்றப்பட்டனர். பத்திரிக்கையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. கூட்டம் முடிந்து வெளியில் வந்த பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி கூறியது: இக் கூட்டத்தில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்தை தெளிவாகத் தெரிவித்துள்ளனர்.

    தேர்தல் முடிவுகள் தொடர்பாக முடிவெடுக்க பாமக நிறுவனர் ராமதாஸூக்கு முழு அதிகாரம் அளித்து இக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai