சுடச்சுட

  
  aiadmk

  தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரசாரம் செய்ததாக, மதுரை மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் (படம்) மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து வழக்குரைஞர் ஆர்.எம்.அன்புநிதி, தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் வியாழக்கிழமை புகார் கொடுத்துள்ளார். அதன் விவரம்:

  வழிப்பாட்டுத் தலங்களின் உள்ளேயோ அல்லது வெளிப்பகுதியிலோ தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் நடத்தை விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோபாலகிருஷ்ணன், தமிழக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா மற்றும் கட்சியினர் ஆரப்பாளையம் ரட்சண்ய தேவாலயத்தில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளனர்.

  இதோடு, நரசிங்கம் யோக நரசிம்மர் கோயில் அருகே இருந்து வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் கடந்த திங்கள்கிழமை பிரசாரத்தை துவக்கினார். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும்.

  அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai