Enable Javscript for better performance
பணம் மோசடி வழக்கு: கடலூர் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பணம் மோசடி வழக்கு: கடலூர் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் கைது

    By dn  |   Published on : 07th March 2014 03:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணம் மோசடி வழக்கு தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் கடலூர் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் சபா.சசிக்குமாரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    கன்னியாக்குமரி மாவட்டம், சூசைபுரத்தைச் சேர்ந்த கொச்சப்ப நாடார் மகன் செல்லதுரை என்பவரிடம், சிதம்பரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்த கடலூர் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் சபா.சசிக்குமார் 2012-ம் ஆண்டு எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.37 லட்சம் பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் சீட்டும் வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பித்தரவில்லையாம்.

    இதுகுறித்து செல்லதுரை நாகர்கோவில் விரைவு நீதிமன்றத்தில் பணம் மோசடி வழக்கு தொடுத்தார்.

    இவ்வழக்கில் ஆஜராகாமல் இருந்த சபா.சசிக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, நாகர்கோவில் விரைவு நீதிமன்ற நீதிபதி பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தார்.

    அதன் பேரில், சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மீனா மற்றும் போலீஸார், சபா.சசிக்குமாரை வியாழக்கிழமை கைது செய்தனர். பின்னர், சபா.சசிக்குமாரை நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai