சுடச்சுட

    

    பணிமனைகளில் நிறுத்தப்படும் பழுதடைந்த பஸ்கள் ஏலம் விடப்படுமா?

    By எஸ்.முகமது கவுஸ்  |   Published on : 07th March 2014 04:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bus

    திருவள்ளூர் அரசு போக்குவரத்துப் பணிமனையில் ஓராண்டாக நிறுத்தப்பட்டுள்ள பழுதடைந்த பஸ்கள் விரைவில் ஏலம் விடப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் அரசு போக்குவரத்து பணிமனைகள் இயங்கி வருகின்றன.

    மேற்கண்ட டிப்போக்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட பஸ்கள் 70-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

    இந்த பஸ்கள் குறிப்பிட்ட காலத்தில் பழுதடைந்துவிடும். அவ்வாறு பழுதடைந்த பஸ்கள், அந்ததந்த பணிமனைகளிலேயே நிறுத்தப்படும்.

    பின்னர் அவை ஏலம் விடப்படும்.

    இந்நிலையில் திருவள்ளூர் போக்குவரத்து பணிமனையில் 12 பழுதடைந்த பஸ்கள், ஓராண்டாகியும் ஏலம் விடப்படாமல் உள்ளன. இதனால் மழை, வெயிலில் அவை மேலும் சேதமடைந்து ஏலம் விடுவதற்கும் உபயோகமில்லாமல் போய்விடும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    எனவே அந்த பஸ்களை விரைவில் ஏலம் விட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுபோல் மற்ற போக்குவரத்து பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ள பஸ்களையும் உடனடியாக ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

    இதுகுறித்து போக்குவரத்து பணிமனை நிர்வாகிகள் கூறியது: எந்த பணிமனையிலும் அதுபோல் பஸ்களை மக்க விடுவதில்லை.

    ஒவ்வொரு பஸ்ஸýம் அதன் காலக்கெடு அல்லது 10 முதல் 12 லட்சம் கிலோமீட்டர் தூரம் வரை கடந்த பின்பு பழுதடைந்தால் அவை போக்குவரத்துக்கு பயன்படாது என கருதி பணிமனைகளில் நிறுத்தப்படும்.

    அப்படி நிறுத்தப்பட்ட பஸ்களின் ஆவணங்கள் வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். அவர்கள் அதனை உரிய மதிப்பீடு செய்வர்.

    மதிப்பீடு செய்யப்பட்ட பஸ்கள், இங்கிருந்து காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கையில் உள்ள பணிமனையில் நிறுத்தப்பட்டு அங்கு ஏலம் விடப்படும்.

    பொதுவாக இங்குள்ள பணிமனைகளில் நீண்டகாலம் பஸ்களை நிறுத்துவதில்லை. அதிகபட்சமாக மூன்று மாதங்கள் வரை மட்டுமே நிறுத்தப்படும் என்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai