சுடச்சுட

  
  vijayakanth

  மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை தொடங்க இருப்பதாகவும் தேமுதிக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

  பாஜக, தேமுதிக இடையே கடந்த 2 மாத காலமாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன், பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ், தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தைச் சந்தித்துப் பல முறை பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

  இந்நிலையில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தமிழக பாஜக தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் தில்லியில் பாஜக அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங்கை, சந்தித்துப் பேசினர். அப்போது, தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் மார்ச் முதல் வாரத்துக்குள் தமிழக கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் என்று ராஜ்நாத் சிங் உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து பாஜக தலைவர்கள் மீண்டும் விஜயகாந்தோடு கூட்டணி பேச்சுவார்தை நடத்தி இறுதி செய்தனர். இந்த முடிவை புதன்கிழமை தில்லிக்குச் சென்று ராஜ்நாத் சிங்கிடம் பொன்.ராதாகிருஷ்ணனும், இல.கணேசனும் தெரிவித்தனர்.

  தில்லிருந்து வியாழக்கிழமை (மார்ச் 6) ராஜ்நாத் சிங் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு, விஜயகாந்திடமும், தேமுதிக இளைஞரணி தலைவர் சுதீஷுடமும் கூட்டணியில் இடம்பெற்றதற்காக வாழ்த்துத் தெரிவித்தார். இதன் பிறகே, பாஜகவுடனான கூட்டணி தொடர்பான அறிவிப்பை தேமுதிக வெளியிட்டுள்ளது.

  தேமுதிகவுக்கு 14 இடங்கள்: பாஜக கூட்டணியில் தேமுதிகவுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பாகவே பிரச்னை இருந்தது வந்தது. தேமுதிகவுக்கு தற்போது 14 தொகுதிகள் வரை ஒதுக்க பாஜக முன்வந்துள்ளது. இதனை தேமுதிகவும் ஏற்றுக்கொண்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai