சுடச்சுட

    

    பாஜக கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்ந்தால் வரவேற்போம்

    By dn  |   Published on : 07th March 2014 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பா.ஜ.க. கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்ந்தால் அதனை வரவேற்போம் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநிலப் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

    பல்லடம் அருகேயுள்ள செஞ்சேரிமலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, சுல்தான்பேட்டை ஒன்றியச் செயலாளர் மந்திராச்சலம் தலைமை வகித்தார். கோவை கிழக்கு மாவட்டத் தலைவர் முத்துமாணிக்கம், நிர்வாகிகள் சேதுராமசாமி, பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி வரவேற்றார். ÷கூட்டத்தில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநிலப் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேசியது.

    அழிந்து வரும் விவசாயம் மற்றும் இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்கவும், தேசிய நதி நீர் இணைப்பு, தமிழகத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் ஒதுக்கீடு செய்ய ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளித்த பா.ஜ.க. தலைமை ஏற்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எந்த நிபந்தனையும் இன்றி அக்கூட்டணியில் சேர்ந்துள்ளது. மேலும், பா.ஜ.க. கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்ந்தால் அவர்களை வரவேற்போம்.

    தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை துவக்கியுள்ள முதல்வர் ஜெயலலிதா தன்னை பிரதமராக்க வேண்டும் என்று வாக்கு கேட்கவில்லை, அல்லது மூன்றாவது அணி ஆட்சியமைக்க ஆதரவு கேட்டு ஓட்டு கேட்கவில்லை. இந்தியா முழுவதும் மோடி அலை வீசுகிறது. பா.ஜ.க. கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் தனித்து ஆட்சி அமைக்கும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai