சுடச்சுட

  

  புதுச்சேரி எம்.பி. தொகுதியில் தேர்தல் நன்னடத்தை விதிகளை அமல்படுத்த 120 அரசு அதிகாரிகள் கொண்ட 36 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என தொகுதி தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான தீபக்குமார் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து புதுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் வியாழக்கிழமை கூறியது:

  புதுவை தொகுதியில் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நன்னடத்தை விதிகளை அமல்படுத்த 120 அரசு அதிகாரிகள் கொண்ட 36 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

  தேர்தலின்போது மதுபான நடமாட்டத்தைக் கண்காணிக்க கலால் துறை சார்பில் 7 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். 4 பறக்கும் படைகள் மதுபான நடமாட்டத்தை கண்காணிக்கும்.

  துப்பாக்கிகளை ஒப்படைக்க ஆணை: தேர்தல் சமயத்தில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

  அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவது குறித்து உரிய வழிகாட்டுதல்கள் தரப்பட்டுள்ளன.

  வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்காக வரும் 9ஆம் தேதியும், 23ஆம் தேதியும் வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். வரும் ஏப்ரல் 5ஆம் தேதி வரை பெயரைச் சேர்க்கலாம்.

  வாக்குப் பதிவின் போது அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால் கண்டிப்பாக வாக்களிக்க முடியாது என்றார் தீபக்குமார்.

  ஆலோசனைக் கூட்டம்: பல்வேறு அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள், காவல் துறை உயரதிகாரிகள் பங்கேற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai