சுடச்சுட

  

  விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் தொகுதி மட்டும் ஒதுக்கீடு

  By dn  |   Published on : 07th March 2014 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  thirumalavan_karunanidhi

  திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் (தனி) தொகுதி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  இதற்கான உடன்பாட்டில் திமுக தலைவர் கருணாநிதியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும் வியாழக்கிழமை கையெழுத்திட்டனர்.

  மக்களவைத் தேர்தலில் 3 தனி தொகுதிகளையும், 2 பொது தொகுதிகளையும் ஒதுக்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரி வந்தது.

  இது தொடர்பாக கடந்த 3 நாள்களாக திமுக குழுவினரிடம் விடுதலைச் சிறுத்தைத் தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

  ஆனால், இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

  விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு, திமுக தலைமை கடைசி வரை ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்படும் என்பதில் உறுதியாக இருந்தது.

  இதன் பிறகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இறங்கி வந்து, திமுக கொடுத்த சிதம்பரம் தொகுதியை ஏற்றுக்கொண்டது. தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்ட பிறகு தொல்.திருமாவளவன் கூறியது:

  வாக்கு வங்கி அடிப்படையில் திமுக அணி பலமாக உள்ளது. தற்போது தவறான கருத்துக் கணிப்புகள் வெளியாகின்றன. கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி, 2009-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றதுபோல, திமுக அணியே மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறும். அடுத்த பிரதமர் யார் என்பதையும் திமுக அணியையே தீர்மானிக்கும் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai