சுடச்சுட

  
  ravi

  அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இப்போது ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். நரேந்திர மோடி, மம்தா பானர்ஜி போன்றவர்கள் முக்கிய அறிவிப்புகளைக் கூட முதல் முதலில் ஃபேஸ்புக், டிவிட்டரில் வெளியிடுகின்றனர். திமுக தலைவர் கருணாநிதி, தனது ஒவ்வொரு நடவடிக்கைகையும் சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகிறார்.

  திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 5 தொகுதிகளைக் கேட்டது. ஆனால், கிடைத்தது 1 தொகுதி மட்டுமே. இது குறித்து ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிகுமார், இந்தத் தேர்தலில் வி.சி.க. தனித்துப் போட்டியிட்டு தனது வாக்கு வங்கி என்ன என்பதைகக் காட்டியிருக்க வேண்டும். ஒரு முறையாவது தனித்துப் போட்டியிடாமல் தேர்தல் அரசியலில் எந்தக் கட்சியும் தனது பேர வலிமையை அதிகரித்துக் கொள்ள முடியாது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai