சுடச்சுட

  

  அதிமுகவுக்கு ஆதரவாக புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய இருப்பதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

  முதல்வர் ஜெயலலிதாவை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய பிறகு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

  மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்தத் தொகுதிகளில் முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பிரசாரம் செய்து வருகிறார்.

  இந்த நிலையில், முதல்வரை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மதுரை அதீனம் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

  அப்போது, அதிமுகவுக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்ததுடன், 40 தொகுதிகளிலும் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாகவும் உறுதி அளித்ததாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மற்ற கட்சிகளும் ஆதரவு: மதுரை ஆதீனத்தைத் தொடர்ந்து, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

  இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் பி.வி.கதிரவன், கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ.தனியரசு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் தலைவர் ஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர் ஜெயலலிதாவை தனித்தனியே சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

  அதிமுகவில் இணைந்தனர்: திமுக முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின், திமுக விவசாய அணி மாநில முன்னாள் இணைச் செயலாளர் போடி. ராமநாதன் ஆகியோரும் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai