சுடச்சுட

    

    அழைப்பு இல்லாமல் வந்த ஆம் ஆத்மி அனைத்துக் கட்சி கூட்டத்தில் சலசலப்பு

    By dn  |   Published on : 08th March 2014 02:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    aam_adhmi

    தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் ஆணையத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆம்-ஆத்மி கட்சி சார்பில் பங்கேற்க இரண்டு பேர் வந்தனர். அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் வெளியேறிச் சென்றனர்.

    ஆனாலும், ஆம்-ஆத்மி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தும், தங்களது கட்சி குறித்தும் பெருமைபட பேசிச் சென்றனர். மக்களவைத் தேர்தலை ஒட்டி, தேசிய மற்றும் மாநில அளவில் அங்கீகாரம் பெற்ற கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

    இந்தக் கூட்டத்தில், திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய ஒன்பது கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. கூட்டம் காலை 11 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வந்தது. அப்போது, திடீரென ஆம்-ஆத்மி கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் ஷேக் மைதீன், ஷபி ஆகியோர் வந்தனர். கூட்டத்தில் தாங்களும் பங்கேற்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து, தேர்தல் துறை அதிகாரிகள் அவர்களை உள்ளே அனுப்பி வைத்தனர். ஆனால், தேர்தல் ஆணையத்தால் தேசிய அளவிலோ அல்லது தமிழக அளவிலோ அங்கீகாரம் பெறாத ஆம்-ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் அனுமதி மறுத்தார்.

    இதனால், வெளியேறிய அவர்கள் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது நியாயமில்லாத செயல் என்று உரக்க குரல் எழுப்பினர். அப்போது, அங்கிருந்தவர்கள் உங்களுக்கு அழைப்பு இல்லை. எப்படி அனுமதி அளிக்க முடியும். அழைப்பிதழ் இல்லாத வீட்டுத் திருமணத்துக்குச் செல்வீர்களா என்று கமெண்ட் அடித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai