Enable Javscript for better performance
கிருஷ்ணகிரி அணையில் முகாமிட்டுள்ள யானைகள்- Dinamani

சுடச்சுட

    
    elephant

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை வனப் பகுதியிலிருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் கிருஷ்ணகிரி அணைப் பகுதியில் வெள்ளிக்கிழமை முகாமிட்டிருந்தன.

    ராயக்கோட்டை வனப் பகுதியிலிருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள், காவேரிப்பட்டணம் அருகே தென்பெண்ணை ஆற்றங்கரைப் பகுதியில் சுற்றித் திரிந்தன. அவற்றை ராயக்கோட்டை வனப் பகுதிக்கு விரட்டும் பணியில் வனத் துறையினர் வியாழக்கிழமை ஈடுபட்டனர். அப்போது அந்த யானைகள் காவேரிப்பட்டணம் அருகே உள்ள சவுளூர் கிராமத்துக்கு வந்தன.

    பின்னர், அங்கிருந்து காவேரிப்பட்டணம் பேருந்து நிலையம் அருகே மேம்பாலம் அருகே ஓடின. வனத் துறையினரின் தீவிர முயற்சிக்குப் பிறகு, இந்த யானைகள் அங்கிருந்து விரட்டப்பட்டதால், கிருஷ்ணகிரி அணைப் பகுதிக்குச் சென்றன.

    கிருஷ்ணகிரி அணையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த யானைகள் வெள்ளிக்கிழமை முகாமிட்டிருந்தன. அங்குள்ள மாந்தோப்பில் முகாமிட்டிருந்த யானைகளை வனத் துறையினர் பட்டாசுகள் வெடித்து சோக்காடி வனப் பகுதிக்கு விரட்ட முயன்றனர்.

    அப்போது, கோபம் அடைந்த யானைகள் அங்கிருந்தவர்களை விரட்டத் தொடங்கின. மேலும், அணைக்கு செல்லும் சாலையில் நடந்து யானைகள் சென்றதால், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    யானைகளை விரட்டும் பணியில் பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு தராததால், அவற்றை வனப் பகுதிக்கு விரட்டும் பணியில் தாமதம் ஏற்படுவதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai