சுடச்சுட

  
  thirumalavan

  திமுக கூட்டணியில் தொடரலாமா வேண்டமா என்பது தொடர்பாக முடிவு செய்வதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயற்குழு சனிக்கிழமை (மார்ச் 8) அவசரமாகக் கூடுகிறது.

  திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் 3 தனி தொகுதிகளும், 2 பொது தொகுதிகளும் கேட்டு வந்தது. ஆனால் திமுக தர முன்வரவில்லை.

  திமுக கூட்டணியில் கடந்த முறை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

  இந்த இரண்டு தொகுதிகளாவது ஒதுக்கப்படும் என்று வி.சிறுத்தைகள் எதிர்பார்த்தன. ஆனால் சிதம்பரம் தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அதிருப்தி என்றாலும், தி.மு.க உடன்பாட்டில் வெள்ளிக்கிழமை திருமாவளவன் கையெழுத்திட்டார்.

  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அறிவாலயத்திலேயே வி.சிறுத்தைகள் கட்சி தொண்டர் கருப்பையா என்பவர் தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரைத் திருமாவளவன் உள்ளிட்டோர் தடுத்து அழைத்துச் சென்றனர்.

  கட்சியில் எதிர்ப்பு: சிதம்பரம் தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

  அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் வெளிப்படையாக அவருடைய ஃபேஸ்புக்கில் வி.சிறுத்தைகள் தனித்து நின்று தன் பலத்தை நிரூபிக்க வேண்டும். அப்படி நின்றால் தொகுதி அதிகம் கேட்டு, பேரம் செய்யலாம் என்று கூறியுள்ளார்.

  இந்தக் கருத்தை வி.சிறுத்தைகள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதனால் திமுக கூட்டணியில் தொடரக் கூடாது என்ற குரல் அந்தக் கட்சியில் அதிகரித்துள்ளது.

  இது தொடர்பாக விவாதிப்பதற்காகவே அக் கட்சியின் மாநிலக் குழு அவசரக் கூட்டம் வேளச்சேரியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் சனிக்கிழமை (மார்ச்.8) நடைபெறுகிறது.

  ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கியது வருத்தம் என்றாலும், மதவாத சக்திகளுக்கு வாக்குகள் சென்றுவிடக்கூடாது என்பதற்காக திமுக கூட்டணியில் தொடருவதாக தொல்.திருமாவளவன் கூறியிருந்தார்.

  இந்தக் கருத்தையே திருமாவளவன் கடைப்பிடிப்பரா அல்லது கட்சி நிர்வாகிகளின் கருத்துக்கு செவிமடுப்பாரா என்பது அக் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்துக்குப் பிறகு தெரியும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai