Enable Javscript for better performance
சினிமா கலை இயக்குநரை தேட சிறப்பு அதிரடிப்படை- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளியங்கிரி மலையில் காணாமல் போன சினிமா கலை இயக்குநரை தேட சிறப்பு அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத் (35). சென்னை, கே.கே.நகரில் தங்கி சினிமாவில் கலை இயக்குநராக பணி செய்து வருகிறார். கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி சிவராத்திரி தினத்தன்று கோவை வந்த அவர், பூண்டி அருகே வெள்ளியங்கிரி மலைக்கு சென்றார். அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு மறுநாள் காலை இறங்கும் நேரத்தில், வழிதவறி காட்டுக்குள் சென்றதாக தெரிகிறது. பிறகு அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. வனத்துறையினர், போலீஸார் தேடி இதுவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் சனிக்கிழமை முதல் சிறப்பு அதிரடிப்படையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai