சுடச்சுட

  
  lorry

  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பாமாயில் பாக்கெட்டுகளை ஏற்றிச் சென்ற லாரி, நிலைதடுமாறி சாலையோரப் பள்ளத்தில் சனிக்கிழமை அதிகாலை கவிழ்ந்தது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாமாயில் வீணானது.

  ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து காரைக்காலுக்கு பாமாயில் பாக்கெட்டுகள் அடங்கிய அட்டைப் பெட்டிகள் மற்றும் டின்களுடன் ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை வேலூர் சின்ன ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஆறுமுகம் (42) ஓட்டி வந்தார். அதே ஊரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (32) என்பவர் கிளீனராக உடன் சென்றார்.

  சனிக்கிழமை அதிகாலை, செஞ்சியை அடுத்த கவரைப் பகுதியில் சென்ற லாரி, அங்குள்ள வளைவில் திரும்பியபோது திடீரென நிலைதடுமாறி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. ÷இதில் லாரியில் இருந்த பாமாயில் டின்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பாக்கெட்டுகள் சேதமடைந்தன. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. விபத்தில் டிரைவர் ஆறுமுகம் காயமின்றி தப்பினார். படுகாயமடைந்த கிளீனர் சத்தியமூர்த்தி, செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  அனந்தபுரம் போலீஸார் லாரியை மீட்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தியதுடன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai