சுடச்சுட

  

  சோதனைகளை எதிர்கொண்டு சரித்திரம் படைப்போம்: முதல்வர் ஜெயலலிதா மகளிர் தின வாழ்த்து

  By dn  |   Published on : 08th March 2014 03:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jaya

  வாழ்வில் ஏற்படும் சோதனைகளை எதிர்கொண்டு சரித்திரம் படைக்க உறுதி ஏற்போம் என்று அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

  சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

  பெண்ணுரிமையை உறுதிப்படுத்தும் வகையிலும், பெண்களின் சிறப்பை போற்றும் வகையிலும் சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை உலகுக்கு உணர்த்திடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதியன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

  பெண்கள் கல்வி அறிவு பெற்று, பொருளாதார முன்னேற்றம் எய்திடும் வகையில், தமிழகத்தில் தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி, தாலிக்கு தங்கம், மகளிர் தங்கும் விடுதிகள், பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது, சிறந்த பெண்மணிக்கு அவ்வையார் விருது உள்பட மகளிர் தொடர்பான பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அதிமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் அனைவரது பாராட்டையும் பெற்று சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

  புதிய சரித்திரம்: பெண்கள் நல்வாழ்வுக்கு அதிமுக அரசு எடுத்த சீரிய முயற்சியால் தமிழகத்தில் பெண் கல்வி 76 சதவீதமாக உயர்ந்துள்ளதும், பெண் குழந்தை பாலின விகிதம் 946 ஆக அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

  அனைத்து மகளிரும் இந்தத் திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்தி தங்களது வாழ்வை வளமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம்.

  பெண்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு அவற்றை வெற்றிப்படிகளாக்கி, புதிய சரித்திரம் படைத்திட உறுதியேற்போம். இந்த இனிய நாளில் எனது மகளிர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai