Enable Javscript for better performance
திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட்டுகளா?- Dinamani

சுடச்சுட

    
    dmk

    திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெறுவார்கள் என்று மாவட்டச் செயலாளர்களிடம் கருணாநிதி கூறியுள்ளார்.

    திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு கருணாநிதி தலைமை வகித்தார். திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், வி.பி.துரைசாமி, எஸ்.பி.சற்குணபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மக்களவைத் தேர்தலுக்காக ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துக் கொடுத்தற்காக மாவட்டச் செயலாளர்கள் அனைவருக்கும் தலா ஒரு சவரன் மோதிரத்தை கருணாநிதி அணிவித்தார்.

    பின்னர் மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் கருணாநிதி பேசியபோது, திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட்டுகள் வருகிறார்கள். கூட்டணிக் கட்சிகளோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுரைத்துள்ளார்.

    கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியது:

    கூட்டணிக்குத் தலைமை தாங்கக் கூடிய கட்சியாக நாம் (திமுக) உள்ளோம்.

    அதனால் பெரிய கட்சி, சிறிய கட்சி என்கிற எண்ணம் மாவட்டச் செயலாளர்களுக்கு இருக்கக் கூடாது.

    அதேபோல மாவட்டச் செயலாளர்கள் தமது உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ பரிந்துரை செய்து, அவர்களுக்கு வேட்பாளர் பதவி கிடைக்காமல் இருக்கலாம். அதற்காக மாவட்டச் செயலாளர்கள் யாரும் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டக்கூடாது.

    கட்சியின் வெற்றியே முக்கியம் என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai