சுடச்சுட

  

  இடதுசாரிகளுக்கு அ.தி.மு.க. அணியில் அவர்கள் கேட்பதுபோல தலா மூன்று இடங்கள் ஒதுக்கப்படாததால், நண்பர்களாகப் பிரிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், தி.மு.க. அணியில் சேரப் போவதாக வந்த ஹேஷ்யங்களை வன்மையாக மறுக்கிறார்கள். அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடந்தன என்றாலும், தி.மு.க. அணியில் சேரும் உத்தேசம் இடதுசாரிகளுக்கு இல்லை என்று திட்டவட்டமாக மூத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

  ""தி.மு.க.வுடன் கூட்டணி என்பது சாத்தியமே இல்லை. முதலாவதாக, அ.தி.மு.க. அணியில் போதிய இடங்கள் கிடைக்காததால் நாங்கள் தி.மு.க. அணிக்குத் தாவினோம் என்று சொன்னால், இடதுசாரிகள் மக்கள் மன்றத்தில் கேலிப் பொருளாகி விடுவோம். கொள்கை அடிப்படையிலான இடதுசாரிக் கட்சிகள், குறுகிய அரசியல் ஆதாயங்களைக் கருதி அணி மாறிவிட முடியாது'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அந்த மூத்த தலைவர் கருத்துத் தெரிவித்தார்.

  தி.மு.க. கூட்டணியில் இடதுசாரிகள் இணைய மறுப்பதற்கு, கேரள மாநில இடதுசாரிகளும் ஒரு முக்கிய காரணம் என்று தெரிகிறது. அவர்கள் மார்க்சிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்திடம் எந்தக் காரணத்தைக் கொண்டும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துவிடக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டதாக தில்லி மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தெரிவித்தனர்.

  ""முதன்முதலில் 2ஜி முறைகேடுகள் பற்றிய பிரச்னையை எழுப்பியதே மார்க்சிஸ்டுகள்தான். அதற்குப் பிறகுதான் சுப்பிரமணியம் சுவாமி உள்ளிட்டோர் அந்தப் பிரச்னையை எடுத்துக் கொண்டனர். கேரளத்தில் காங்கிரஸின் ஊழல் சாதனைகளைப் பட்டியலிட்டுத்தான், இடது முன்னணி காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முன்னணியை எதிர்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, அண்டை மாநிலமான கேரளத்தில் காங்கிரஸýக்கு எதிராக 2ஜி போன்ற ஊழல்களை முன்வைத்து எப்படிப் பிரசாரத்தில் ஈடுபடுவது?'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

  மார்க்சிஸ்டுகளின் இந்த வாதத்தை தி.மு.க. தரப்பு எள்ளி நகையாடுகிறது. ""2004 தேர்தலில் கேரளத்தில் காங்கிரûஸ எதிர்த்துப் போட்டியிட்டபோது, காங்கிரஸýம் அங்கம் வகித்த எங்களது கூட்டணியில் இருந்தபோது இந்த "லாஜிக்' இடதுசாரிகளுக்கு எப்படித் தெரியாமல் போயிற்று? இப்போது மட்டும் எங்கிருந்து வந்ததாம் இந்த திடீர் ஞானோதயம்?'' என்று கேள்வி எழுப்பினார் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர்.

  தி.மு.க. தரப்பில், இடதுசாரிகள் வருவதாக இருந்தால் தலா மூன்று இடங்களை ஒதுக்கித் தரக் கட்சித் தலைமை தயாராக இருப்பதாகவும், அப்படி வராவிட்டாலும், அதனால் கவலைப்படப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

  இடதுசாரிகள், தாங்கள் அ.தி.மு.க.விடம் கோரிக்கை வைத்திருந்த ஆறு தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களைக் களமிறக்குவது என்றும், அந்தத் தொகுதிகளில் பெறும் கணிசமான வாக்குகள் அடுத்து வரும் தேர்தல்களில், இப்போது அ.தி.மு.க. உதாசீனப்படுத்தியதுபோல மாநிலக் கட்சிகளால் இடதுசாரிகள் உதாசீனப்படுத்தப்படாமல் இருக்க உதவும் என்றும் கருதுகிறார்கள்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai