சுடச்சுட

    

    கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா, நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) பிரசாரம் செய்யவுள்ளார். இதையொட்டி, பாதுகாப்புப் பணியில் 1500 போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக டி. ஜான் தங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசாரம் செய்கிறார். இதற்காக நாகர்கோவில் பொருள்காட்சி மைதானத்தில் மேடை அமைக்கப்பட்டு வருகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்துக்கு ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வருகிறார். ஹெலிகாப்டர் தளத்திலிருந்து கார் மூலம் பிரசார மேடைக்கு செல்கிறார்.

    பொருள்காட்சி மைதானத்தில் நடைபெற்று வரும் மேடை அமைக்கும் பணியை அமைச்சர் கே.டி. பச்சைமால் தலைமையில் தேர்தல் பணிக்குழுவைச் சேர்ந்த அ. தமிழ்மகன் உசேன், என். தளவாய் சுந்தரம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை பார்வையிட்டனர். மைதானத்தில் குடிநீர் வசதி செய்யப்படுவதாகவும், பொதுமக்களுக்கு வழங்க 20 ஆயிரம் தண்ணீர் பாக்கெட் வரவழைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் பச்சைமால் தெரிவித்தார்.

    போலீஸ் பாதுகாப்பு: பிரசாரம் நடைபெறவுள்ள பொருட்காட்சி மைதானத்தை நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித் சரண் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் குமரி மாவட்ட எஸ்.பி. மணிவண்ணனிடம் ஆலோசனை நடத்தினார்.

    மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்தில் இருந்து பிரசார மேடை வரை போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. 1500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai