சுடச்சுட

    

    நாட்டுப்படகு மீனவர்களை நடுக்கடலில் மூழ்கடிக்க முயற்சித்ததாக புகார்

    By dn  |   Published on : 08th March 2014 03:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rmsfisherman

    பாம்பன் பகுதியைச் சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்களை நடுக்கடலில் மூழ்கடிக்க அப் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் முயற்சித்ததாக மண்டபம் கடலோர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

    பாம்பன் பகுதியிலிருந்து வியாழக்கிழமை காலையில் 100-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

    இவர்கள் பாம்பன் கடல் பகுதியிலிருந்து 20 மைல் நாட்டிக்கல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த பகுதியில் ஒரு விசைப்படகில் மீனவர்கள் வந்துள்ளனர். இந்த நிலையில், மெரில்டன் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகையும், படகிலிருந்த பாலமுருகன், குமார், பாலா, பிராய்லின், நாகராஜ், கென்னடி ஆகிய 6 மீனவர்களையும் விசைப்படகு மீனவர்கள் மோதி மூழ்கடிக்க முயற்சித்துள்ளனர்.

    நாட்டுப் படகிலிருந்த மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி சிறிய ரத்தக் காயங்களோடு வெள்ளிக்கிழமை அதிகாலையில் பாம்பன் பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

    இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் மண்டபம் கடலோர போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

    இந்த புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai