சுடச்சுட

  
  ban

  மக்களவைத் தேர்தலில் பணத்தின் கைகளை கட்டிப்போட தேர்தல் துறை சார்பில் தனி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடிக்க தேர்தல் துறை முடிவு செய்துள்ளது. இதன்படி, ஏழு பிரிவுகளைக் கொண்ட தேர்தல் துறையானது இப்போது மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு கூடுதல் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

  அதில், குறிப்பாக தேர்தல் நடத்தை நெறிமுறைகளைக் கண்காணிப்பதற்காக தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறினாலோ அல்லது அதுதொடர்பாக வரும் புகார்கள் மற்றும் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்த மாவட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு பரிந்துரை செய்யவும், அவற்றை கண்காணிப்பதும் தனிப் பிரிவின் பணியாகும்.

  இதுகுறித்து தேர்தல் துறை அதிகாரிகள் கூறுகையில், மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பணப் புழக்கம் அதிகமாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இந்த நிலையில், நடத்தை நெறிமுறைகளை தீவிரமாக அமல்படுத்துவதன் மூலம் மட்டுமே இந்த பணப்புழக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். இதன் அடிப்படையில்

  தேர்தல் நடத்தை நெறிமுறைகளைக் கண்காணிக்க தனிப் பிரிவு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்தப் பிரிவு உருவாக்கப்படுவது வழக்கமானது என்றாலும் இந்தத் தேர்தலில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என அவர்கள் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai