சுடச்சுட

  

  பவானிசாகர் வனப்பகுதியில் உயிருக்குப் போராடும் பெண் யானை

  By dn  |   Published on : 08th March 2014 11:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பவானிசாகர் வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் பெண்யானையைக் காப்பாற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

  பவானிசாகர் வனச்சரகத்திற்கு உள்பட்ட காராச்சிக்கொரை வனப்பகுதி, சுஜில்குட்டையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் யானை ஒன்று உடல்நலம் குன்றிய நிலையில் படுத்துக் கிடப்பதாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

  பவானிசாகர் வனச்சரகர் சிவசுப்பிரமணியம் மற்றும் வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது 20 வயதுள்ள பெண்யானை சோர்வுற்றுப் படுத்த நிலையில் காணப்பட்டது. வனகால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்தனர். காது வழியாக மருந்து செலுத்தியபோது யானை புத்துணர்வு பெற்று எழுந்து நடக்க முயன்றது. அதனால் அந்த யானை சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் முரண்டு பிடித்தது. தொடர்ந்து, யானை அருகே வனத்துறையினர் முகாமிட்டுக் கண்காணித்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai