சுடச்சுட

    

    கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான புஷ்பராயன், ஆம்ஆத்மி கட்சியில் வெள்ளிக்கிழமை இணைந்தார்.

    கூடங்குளம் அணுஉலைக்கெதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வந்தனர்.

    இந்நிலையில், போராட்ட பாதையை அரசியல் தளத்துக்கு எடுத்துச் செல்வதாக அறிவித்து, போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார், மை.பா.சேசுராஜ், மில்டன் ஆகியோர் ஆம்ஆத்மி கட்சியில் இணைந்தனர். அப்போது, புஷ்பராயன் அரசியல் கட்சியில் சேர விரும்பவில்லை எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் ஆம்ஆத்மி கட்சியில் வெள்ளிக்கிழமை இணைந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், எனது சமுதாய மக்களின் விருப்பத்திற்கேற்ப ஆம்ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளேன். எனது மக்களது விருப்பம்தான் எனது விருப்பம். இனி கட்சிப் பணியில் புதிய வேகத்துடன் பணியாற்றுவேன் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai