சுடச்சுட

  
  pranab (2)

  உலக மகளிர் தினம் சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், பெண்கள் மீதான சமூகத்தின் எதிர்மறை எண்ணம் மாற வேண்டும் என்று குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

  உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியப் பெண்கள் பல ஆண்டுகளாக அரசியல், கல்வி மற்றும் ஆன்மீகத் துறைகளில் உயரிய இடங்களை அடைந்துள்ளனர். பண்டையக் காலங்களில் அவர்கள் சுதந்திரமாகவும், ஆண்களுக்கு சமமாகவும் நடத்தப்பட்டுள்ளனர். பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது பாலின சமத்துவம் மட்டுமல்லாது, நாட்டை கட்டமைப்பதில் முழுப் பங்கேற்பையும் அவர்கள் அளிக்கும் வகையில் அமைய வேண்டும். சமூகத்தில் பெண்கள் மீதான எதிர்மறை எண்ணங்கள் மாற வேண்டும் என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai