சுடச்சுட

  
  rosaiah

  சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, ஆளுநர் ரோசய்யா தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

  இது குறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

  சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது சமூகத்திலும், இல்லத்திலும் பெண்களே அனைத்தையும் தாங்கிக் கொள்ளும் மிகப்பெரிய தூண்களாக இருக்கின்றனர். நைரோபியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாட்டில், மகளிருக்கு அதிகாரம் அளிப்பதற்கான கருத்துகள் முன்மொழியப்பட்டன. ஆனாலும் அதைச் செயல்படுத்தவும், ஆண்களுக்கு இணையாக அனைத்துத் துறைகளிலும் பெண்களைக் கொண்டு வருவதிலும் நாம் வெற்றி பெறவில்லை. அதற்காக இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு உரிய மரியாதை அளிப்பதிலும், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அனைவரும் கைகோர்ந்து நிற்போம் என்று தனது வாழ்த்துச் செய்தியில் ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai