சுடச்சுட

  
  alagiri

  தற்போது நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

  திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்தின் முன்னாள் (கட்சியிலிருந்து அண்மையில் வெளியேற்றப்பட்ட) திமுக ஒன்றியச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவாளருமான பூண்டி என்.பாஸ்கரின் தாயார் உருவப்படத்தை திறந்து வைக்கும் நிகழ்வுக்கு வெள்ளிக்கிழமை காலை மு.க.அழகிரி வந்திருந்தார்.

  நிகழ்ச்சியில் அவர் பேசியது: எனக்காக இங்கு வந்திருக்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது, இது துக்க நிகழ்ச்சி என்ற உணர்வையும் மீறி மகிழ்ச்சி உண்டாகிறது.

  எனக்கு இது சோதனைக் காலம். ஆனால் சோதனையைக் கண்டு நான் துவண்டுவிடவில்லை.

  கட்சித் தோழர்களுக்காக பேசியதால், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டேன். தற்போது கட்சியில் தலைவருக்கு தெரியாமல் பல விஷயங்கள் நடைபெறுகின்றன.

  நான் தற்போது நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. 2 மாதங்களுக்கு பின்னர் என்னுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன் என்றார் மு.க. அழகிரி.

  இதனைத்தொடர்ந்து விபத்தில் காயமடைந்த முன்னாள் (அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட) திருவாலங்காடு திமுக ஒன்றியச் செயலாளர் ரமேஷ்காந்தின் உடல்நிலை குறித்து விசாரிக்க கம்மாசத்திரத்தை அடுத்த பனப்பாக்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றார். அவரை சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டி:

  கேள்வி: தேமுதிக கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்காகதான், உங்களைக் கட்சியிலிருந்து நீக்கினார்கள். இப்போது திமுகவுடன் தேமுதிக கூட்டணி சேரவில்லை. இந்நிலையில் மீண்டும் உங்களைக் கட்சியில் சேர்த்துக் கொள்வார்களா?

  பதில்: இந்த கேள்வியை கட்சித் தலைமையிடம்தான் கேட்க வேண்டும்.

  கேள்வி: தி.மு.க. வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாள்களில் வெளியிடப்படவுள்ளது. அதில் உங்களின் ஆதரவாளர்களுக்கு இடம் ஒதுக்காவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

  பதில்: தேர்தல் முடிந்ததும் 2 மாதங்களுக்குப் பிறகு எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு முக்கிய முடிவு எடுக்கப்படும்.

  கேள்வி: நீங்கள் தனித்துப் போட்டியிட விரும்புகிறீர்களா?

  பதில்: அதற்கு வாய்ப்பே இல்லை.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai