சுடச்சுட

  
  jaya_mamta

  பிரதமர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்ததற்காக மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு தொலைபேசி மூலம் முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

  இடதுசாரி கட்சிகள் அதிமுக கூட்டணியிலிருந்து வியாழக்கிழமை வெளியேறியதாக அறிவித்தன.

  இதையடுத்து, தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த மம்தா பானர்ஜி, ஐக்கிய முன்னணிக்கு ஜெயலலிதா வர வேண்டும். அவர் பிரதமர் ஆவதில் தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என தெரிவித்தார்.

  இதைத் தொடர்ந்து மம்தா பானர்ஜியை முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை காலையில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்ததாக திரிணமூல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், இந்தத் தேர்தலில் வெற்றி பெற மம்தாவுக்கு வாழ்த்துகளை அவர் தெரிவித்ததாகவும் மக்களவைத் தேர்தல் குறித்து இருவரும் விவாதித்ததாகவும் தெரிகிறது.

  அதிமுக கூட்டணியில் இருந்து இடதுசாரி கட்சிகள் வெளியேறிய மறுதினமே இந்தப் பேச்சு நடைபெற்றுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai