சுடச்சுட

  

  மேட்டுப்பாளையத்தில் காட்டாற்று வெள்ளம்! சிறுமி பலி; பல வீடுகள் சேதம்

  By dn  |   Published on : 08th March 2014 03:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், கல்லாறு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு (6-ஆம் தேதி) இடி, மின்னல், சூறாவளியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில், ராமசாமி நகர் பகுதியிலுள்ள டேன்இந்தியா பள்ளத்தில் திடீரென காட்டாற்று வெள்ளம் கரை புரண்டோடியது. தற்போது இந்தப் பள்ளத்தில் உயர்மட்டப் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்வழியாக காட்டாற்று வெள்ளம் கரை புரண்டோடியதால், பாலத்தின் இருபுறமும் இருந்த வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது.

  இதில் அப்பகுதியில் வசித்து வந்த தனியார் ஆம்புலன்ஸ் வண்டி ஓட்டுனர் ஹரிஹரன் (34), தனது மனைவி மகாதேவி, மகன் வருண்குமார் (9), மகள் ஹாசினி (6) ஆகியோருடன் வீட்டைவிட்டு வெளியேற முயன்றார். அவரது வீட்டை அதிக அளவில் வெள்ளம் சூழ்ந்திருந்ததால், 4 பேரும் வீட்டைவிட்டு வெளிவர முடியாமல் தவித்தனர். ஒருவழியாக கணவனும் மனைவியும் வெள்ளத்தின் நடுவே நடந்துவந்து கரை சேர்ந்தனர். ஹாசினியை அவரது அண்ணன் வருண்குமார் தோளில் தூக்கி வைத்தவாறு தட்டுத் தடுமாறி நீரில் நடந்து வந்தார்.அப்போது தடுமாறியதில் ஹாசினியை வெள்ளம் அடித்துச் சென்றது. தகவலறிந்ததும், மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய வீரர்கள் அந்த இடத்திற்கு வந்து வருண்குமாரை மீட்டனர். வெள்ளிபாளையம் சாலை, கரட்டுமேடு பகுதியில் உள்ள பவானி ஆற்றுநீர்த் தேக்கப் பகுதியில் சிறுமி ஹாசினியின் உடல் மீட்கப்பட்டது. இறந்த ஹாசினி இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai