சுடச்சுட

    

    ராமேசுவரம் மீனவர்கள் 9 பேருக்கு மார்ச் 20 வரை காவல்: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    By dn  |   Published on : 08th March 2014 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    law

    எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்களை மார்ச் 20 ஆம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த புதன்கிழமை ராமேசுவரம் பகுதியிலிருந்து தேவசகாயம், ஆரோக்கியதாஸ் ஆகியோரின் படகுகளில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற நிலன், கிறிஸ்டோபர், கெட்சோன், கிளிண்டன், ரிகால்டன், நாகு, மோகன், நம்புராஜன், முருகன் ஆகிய 9 மீனவர்களையும் தனுஷ்கோடி, கச்சத்தீவு கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர், வியாழக்கிழமை அதிகாலையில் மன்னார் காவல் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்தனர். போலீஸார் விசாரணைக்குப் பின் மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக வழக்குப் பதிந்து, வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை விசாரணை செய்த நீதிபதி மார்ச் 20 ஆம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    மேலும், நீதிபதியின் உத்தரவின் படி 9 மீனவர்களும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai