சுடச்சுட

  

  அன்பு மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்

  இடதுசாரிகள் வந்தால் வரவேற்போம் என திமுக தலைவர் கருணாநிதியும் அழைத்ததை அடுத்து இடதுசாரி கட்சிகள் திமுக கூட்டணிக்குச் செல்வதை சமூக ஊடகங்களில் ஏராளமானோர் கிண்டலடித்துள்ளனர்.

  அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. பாலபாரதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அளித்துள்ள பதில்: ராஜ்யசபா இடத்தை நோகாமல் பெற்றுவிட்டதால் இன்னொரு இடத்துக்குச் செல்ல தயாராகி விட்டார்கள் என்று நள்ளிரவில் தூக்கம் தொலைத்து பதிவிடுகிறார்கள் சில நண்பர்கள்.

  இந்த அன்பு மிரட்டலுக்கெல்லாம் அஞ்சமாட்டோம். வாழ்க நிழல்கள். வெல்க அதன் வதந்தீ பணிகள்.

   

   

   

   

  தூணுக்கு வந்த சோதனை

  மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதையொட்டி தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி திட்டங்களுக்கான விளம்பரங்களில் தமிழக முதல்வரின் படம், பெயர் உள்ளிட்டவை மறைக்கப்பட வேண்டும்.

  இந்நிலையில் உதகையில் அரசினர் தாவரவியல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ஜே.ஜே. தூணையும் மறைக்குமாறு வலியுறுத்தி, சனிக்கிழமை பிற்பகலில் முன்னாள் அமைச்சர் கா.ராமசந்திரன் தலைமையிலான திமுக-வினர் பூங்கா வளாகத்திற்குள் திடீர் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை அடுத்து ஜே.ஜே. தூண், துணிகளால் மறைக்கப்பட்டது.

   

   

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai