சுடச்சுட

  

  இடதுசாரிகளுக்கு "விடை' கொடுத்ததை மறந்த புதுகை அதிமுகவினர்

  By dn  |   Published on : 09th March 2014 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pdk_admk

  தங்களது கட்சித் தலைமை இடதுசாரி கட்சிகளுக்கு விடை கொடுத்ததை மறந்த புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவினர், அக்கட்சிகளின் மாநிலத் தலைவர்களின் படங்களுடன் பதாகை வைத்திருந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து இடதுசாரிகள் வெளியேறிவிட்ட நிலையில், புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடும் வகையில், பழைய பஸ் நிலையம் மற்றும் கூட்டம் நடைபெற்ற மூவார் திருமண மண்டப மேடை ஆகிய இடங்களில் பிளெக்ஸ் போர்டுகளை அதிமுகவினர் வைத்திருந்தனர்.

  அவற்றில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன. இதைப் பார்த்த இருகட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் எம். சின்னத்துரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் த. செங்கோடன், நிர்வாகி க.சி. விடுதலைக்குமரன் ஆகியோர் கூறியது:

  மக்களவைத் தேர்தலில் அதிமுக, இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். தொகுதி பங்கீடு தொடர்பாக நடைபெற்ற கசப்பான நிகழ்வுகள் காரணமாக இடதுசாரிக் கட்சிகள் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டன.

  இந்தச் சூழ்நிலையில், அதிமுகவினர் மேற்கொண்ட நடவடிக்கை சரியானதல்ல என்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai