சுடச்சுட

    
    karunanidhi

    மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் வேட்பாளர் பட்டியலை மார்ச் 10-ஆம் தேதியும், தேர்தல் அறிக்கையை மார்ச் 11-ஆம் தேதியும் கருணாநிதி வெளியிட உள்ளார்.

    திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் (2 தொகுதிகள்), புதிய தமிழகம் (1 தொகுதி), மனித நேய மக்கள் கட்சி (1 தொகுதி) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி (1 தொகுதி)ஆகிய கட்சிகள் உள்ளன.

    இந்தக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகள் போக, மீதம் 35 தொகுதிகள் திமுகவிடம் உள்ளன.

    இடதுசாரி கட்சிகளுக்கு திமுக தலைவர் கருணாநிதியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் அழைப்பு விடுத்துள்ளனர்.

    நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலுவும், இடதுசாரிக் கட்சிகளின் தேசிய தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    ஆனால், இடதுசாரிகள் திமுக கூட்டணியில் பங்கேற்க மறுத்து வருகின்றனர்.

    எனினும், கடைசி நேரத்தில் இடதுசாரிகள் வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் திமுக இருந்து வருகிறது.

    3 நாள் கெடு: இதனால் இடதுசாரிகளுக்கு 3 நாள் வரை திமுக கெடு நிர்ணயித்துள்ளது.

    3 நாள்களுக்குள் இடதுசாரிகள் தங்கள் முடிவைத் தெரிவிக்காவிட்டால், மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை மார்ச் 10-ஆம் தேதி வெளியிடத் திமுக திட்டமிட்டுள்ளது.

    35 தொகுதிகளுக்கான திமுகவின் வேட்பாளரைக் கருணாநிதி அறிவிக்க உள்ளார்.

    தேர்தல் அறிக்கை: திமுகவின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க நாடாளுமன்றத் திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. அதில் துணைப் பொதுச்செயலாளர் எஸ்.பி.சற்குணபாண்டியன், மாநிலங்களவைக் குழுத் தலைவர் கனிமொழி, திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் சுப்புலெட்சுமி ஜெகதீசன், பேராசிரியர் ராமசாமி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

    அந்தக் குழுவினர் தேர்தல் அறிக்கையைத் தயாரித்து, கருணாநிதியிடம் அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை கொடுத்தனர்.

    இந்த அறிக்கையை மார்ச் 11-ஆம் தேதி கருணாநிதி வெளியிட உள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai