சுடச்சுட

    

    இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 8 விசைப்படகுகள் காரைக்கால் வந்தன

    By dn  |   Published on : 09th March 2014 02:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கை நீதிமன்றத்தால் அண்மையில் விடுவிக்கப்பட்ட காரைக்கால், நாகப்பட்டினம் மீனவர்களின் 8 விசைப்படகுகள், சனிக்கிழமை காரைக்கால் துறைமுகம் கொண்டு வரப்பட்டன.

    காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த செல்லதுரை, ஆனந்தவேல், அன்பழகன் உள்ளிட்ட 6 பேரும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களின் 6 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல், கடந்த ஆண்டு ஜூலையில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை நம்பியார் நகரைச் சேர்ந்த ஆறுமுகம், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த கந்தசாமி ஆகியோரும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், பிப்ரவரி 23-ம் தேதி மீனவர்களின் 8 விசைப் படகுகளையும் விடுவித்து திரிகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மீனவர்களையும் அவர்களின் 8 விசைப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சர்வதேச எல்லையில் இந்திய கடலோரக் காவல் படையினரிடம் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒப்படைத்தனர். மீனவர்கள் அவர்களின் படகுகளுடன் சனிக்கிழமை காலை காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai